என் மலர்tooltip icon

    சிவகங்கை

    நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வெள்ளி தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது

    சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணு டைய நாயகி அம்மன் கோவி லில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக் கான விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவின் நேற்று தங்க தேரோட்டம் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்டம் இன்று இரவு 7 மணியள வில் நடக்கிறது. முன்ன தாக அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள் வார். பின்னர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக மாவட் டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பக்தர்களின் வசதிக் காக கூடுதல் பஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    தேவகோட்டை அருகே ஏழுவங்கோட்டை விஸ்வ நாதர் சுவாமி கோவில் வைகாசி திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஏழுவங் கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடி யேற்றத்துடன் காப்பு கட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங் கியது.

    ஒவ்வொரு நாளும் ரிஷபம் வாகனம், பூத வாகனம், யானை வாகனம், கைலாய வாகனம், குதிரை வாக னம் ஆகியவற்றில் சுவாமியை கிராம மக்கள் சுமந்து கோவிலை சுற்றி வீதிகளில் வலம் வந்தனர்.

    தினமும் சிறப்பு அபிஷேக மும், தீபாராதனையும் நடை பெற்று. ஓன்பதாம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. ஏழுவங்கோட்டை, பெரியகாரை, தெண்ணீர் வயல், மருத்தானி, ஈகரை, கோட்டவயல், கல்லங்குடி, கள்ளிக்குடி, நடுவிக்கோட்டை மற்றும் 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 5000–க்கும் மேற்பட்டேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் அ.தி.மு.க. கழகத்திற்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காரைக்குடி:

    தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் அ.தி.மு.க. கழகத்திற்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.கழகம்-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சி அமைக்க கூடிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சுமார் 100 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றது மனநிறைவை தருகிறது.

    என்னுடைய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.கழகம் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இதற்கு காரணம் தி.மு. கழகத்தினரின் பெரும் பணியும், காங்கிரஸ் தோழர்களின் அரும்பணியும் ஆகும் என்று பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    ஜவுளிக்கடை வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள கல்லல் இந்திரா நகரை சேர்ந்தவர் சுமதி (வயது 23). இவரது கணவர் செல்வம். கணவன்– மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சுமதி, இந்திரா நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கிருந்து கல்லலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சுமதி, வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் தகவல் இல்லை.

    இதுபற்றி சுமதியின் தாயார் அழகம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்னை தேடிவருகிறார்.

    காரைக்குடி அருகே நெஞ்சுவலியால் அவதிப்பட்ட சமையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகப்பசெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது48), சமையல்காரர்.

    இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லையாம். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஞானவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி அருகே டாஸ்மாக் உள்ளிட்ட 4 கடைகளில் ரூ.1¾ லட்சம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர்-திருச்சி ரோட்டில் சுப்பிரமணி, முத்து ஆகியோர் தனித்தனியாக அருகிலேயே மொத்த அரிசி கடை வைத்துள்ளனர்.

    அதே பகுதியில் உலகநாதன் என்பவர் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இதற்கு அருகிலேயே அரசு டாஸ்மாக்கும் செயல்பட்டு வருகிறது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் உள்ளிட்ட 4 கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதில் சுப்பிரமணி கடையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும், முத்து கடையில் ரூ.4 ஆயிரமும், உலகநாதன் கடையில் ரூ.30 ஆயிரமும், டாஸ்மாக்கில் ரூ.4 ஆயிரமும் கொள்ளை போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து பள்ளத்துதூர் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகலில் மழை விட்டு, விட்டு பெய்தது. பின்னர் மாலையில் ஆரம்பித்த தூரல் மழை இரவு முழுவதும் பெய்தது.

    மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி, சிங்கம்புணரி, தேவகோட்டை, கல்லல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்து காணப்படுகிறது. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது விட்டு, விட்டு லேசான மழை தூறிக் கொண்டே இருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம், ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், பாம்பன் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் மழையுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

    சிவகங்கை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 1310 வாக்குச் சாடிவகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார்63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வாக்காளர்கள் வருகை குறைவாக இருந்தது. பெரும்பாலான வாக்குச் சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மலர்விழி, சிவகங்கை நகரில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் அனைத்து கட்சி தொகுதி வேட்பாளர்களும் காலையிலேயே ஓட்டுபோட்டனர்.

    தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 2390 போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தது.

    தி.மு.க.– காங்கிரஸ் கூட் டணி அமோக வெற்றி பெறும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

    காரைக்குடி, மே. 16–

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக் குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 7.05 மணிக்கு கொட்டும் மழையில் குடைபிடித்த படி வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    பின்னர் அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    சட்டசபை தேர்தலில் பணப்புழக்கம் அதிகம் நடந்துள்ளது. இதை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. மக்கள் அனைவரும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். மழை பெய்தாலும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சி அமைக்கும். கருணாநிதி 6–வது முறையாக முதல்– அமைச்சர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×