என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள திருப்பத்தூரை அடுத்த சிராவயலில் ஆண்டுதோறும் உலகப்புகழ் பெற்ற மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதுண்டு. இந்த ஆண்டு இன்று காலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    வேலுச்சாமி அம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சிராவயலைச் சேர்ந்தவருமான சரத்குமார் தொடங்கி வைத்தார். முதல் கோவில் மாட்டை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்து அவிழ்த்து விட்டனர்.

    அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். சில காளைகளை இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர். காளைகளை அடக்க முயன்ற 20 பேர் படுகாயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக, காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

    மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, செந்தில்நாதன் எம்.பி., பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர் அல்பிஜான், வர்க்கீஸ், சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாங்குடி மற்றும் கிராம மக்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சேதுநாராயண புரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்றும், அதன் திமில்களை பிடித்தும் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியில் 200 பெண்கள் உள்பட 250 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலையில் திடீரென பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியரசு தினத்தையொட்டி மருத்துவமனையில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அத்துடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். பி.எப் தொகை பிடித்தம் செய்து செலுத்துவதற்கான உரிய கணக்குகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து வேலைக்கு செல்ல மறுத்துவிட்டனர். நேற்று காலை 7.30 மணியில் இருந்து மதியம் 3வரை துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லமால் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மருத்துவனை பாதுகாவலர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மருத்துவனையில் வழக்கமாக நடைபெறும் துப்புரவு பணி மற்றும் பாதுகாப்பு பணி செய்ய ஆள் இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த இந்த தனியார் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் தாஸ் மற்றும் சிவகங்கை மருத்துவமனை மேலாளர் மாரியப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவனை டீன் பொறுப்பு மகேஸ்வரி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் குழந்தைஆனந்தன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் மற்றும் அந்த தனியார் நிறுவன அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச முடிவு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
    மானாமதுரையில் உள்ள சில பகுதிகளில் செல்லறித்த நிலையில் மின் கம்பங்கள் உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் இவைகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடி பகுதியில் அரித்துபோய் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பல மின்கம்பங்கள் நடுபகுதியில் விரிசல் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டும் காற்று அடித்தால் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளது.

    இதேபோல் மானாமதுரை தெ.புதுக்கோட்டை சாலையில உள்ள கண்ணார் தெரு பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது சாயும் நிலையில் சில மின் கம்பங்களும் செல்லறித்து உள்ளது.

    இதேபோல் மானாமதுரை வைகை ஆற்றை பாதையாக பயன்படுத்தப்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் இருட்டிலும் பொதுமக்கள் செல்லும் நிலை உள்ளது. வாரசந்தை மற்றும் ஆனந்தவல்லி கோவில் முன்பும் உயர் மின் கோபுர (ஹைமாஸ்) விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டு வந்த ரூ. 1.20 கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு தங்கியுள்ள மர்ம ஆசாமிகளிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காரைக்குடி வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 40), அனகாபுத்தூர் அருண் (40), வண்ணாரப் பேட்டை காஜா (39) உள்பட 4 பேர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது ரூ. 1.20 கோடி மதிப்பிலான பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றி, 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    காரைக்குடியை சேர்ந்த ராமையா என்பவருக்கு சொந்தமான பணம் என்றும், அதனை கொடுக்க வந்ததாகவும் 4 பேரும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் ராமையாவை வரவழைத்து விசாரணை நடத்தினர். காரைக்குடியை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் ஒருவர் பழைய பணத்தை மாற்றி புதிய நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்றி தருவதாக கூறினார்.

    அதை நம்பி தான் சென்னையில் ஒரு தெரிந்த ஒருவர் மூலம் பணத்தை கொண்டு வருமாறு கூறியதாக அவர் தெவித்தார். அதன்படி தி.மு.க. பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு முடிந்த நிலையில், ரூ.1.20 கோடி மதிப்பில் பழைய நோட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடியில் உள்ள ஒரு சில வங்கிகள் சட்ட விரோதமாக பணத்தை மாற்றி தருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டுவந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், சென்னை வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டுவந்த ரூ. 1¼ கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு தங்கியுள்ள மர்ம ஆசாமிகளிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காரைக்குடி வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சென்னை அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 40), அனகாபுத்தூர் அருண் (40), வண்ணாரப்பேட்டை காஜா (39) உள்பட 4 பேர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது ரூ. 1¼ கோடி மதிப்பிலான பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றி, 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    காரைக்குடியை சேர்ந்த ராமையா என்பவருக்கு சொந்தமான பணம் என்றும், அதனை கொடுக்க வந்ததாகவும் 4 பேரும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் ராமையாவை வரவழைத்து விசாரணை நடத்தினர். காரைக்குடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் பழைய பணத்தை மாற்றி புதிய நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்றி தருவதாக கூறினார்.

    அதை நம்பி தான் சென்னையில் ஒரு தெரிந்த ஒருவர் மூலம் பணத்தை கொண்டு வருமாறு கூறியதாக அவர் தெவித்தார். அதன்படி தி.மு.க. பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு முடிந்த நிலையில், ரூ.1¼ கோடி மதிப்பில் பழைய நோட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடியில் உள்ள ஒரு சில தனியார் வங்கிகள் சட்டவிரோதமாக பணத்தை மாற்றி தருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சிவகங்கையில் குடியரசு தினவிழாவின் போது 452 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி இன்று காலை 8.05 மணியளவில் கலெக்டர் மலர்விழி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக கலெக்டரை போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியின் போது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 45 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கத்தை கலெக்டர் மலர்விழி வழங்கினார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் 50 பேருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் மூவர்ண பலூன் பறக்கவிடப்பட்டது.

    அதன்பிறகு ரூ. ஒரு கோடியே 87 லட்சத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 452 பேருக்கு வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் முதன் முறையாக சமூக நலத்துறை சார்பில் 11 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்கள் நாகநாதன், செந்தில்வேலு, உமா மனோகரன், லட்சுமி, உமா மகேஸ்வரி, சந்திரபோஸ், கந்தசாமி, செல்வராணி ஆகியோருக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, திட்ட அலுவலர் காஞ்சனா, துணை கலெக்டர்கள் மதியழகன், அரவிந்தன், மக்கள் தொடர்புத்துறை அலுவலர் சீதாலட்சுமி, சமூக நலத்துறை அலுவலர் உமையாள் மற்றும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    திருப்புவனத்தில் கடந்த 1 மாதமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்புவனம்:

    திருப்புவனம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குரிய குடிநீர் வைகை ஆற்றிலிருந்து விநியோகம் செய்து வந்துள்ளனர். வைகை ஆற்றில் லாரி, லாரியாக மணல் அள்ளியதால் நிலத்தடி நீர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் திருப்புவனத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு தினமும் சுமார் 5 லட்சம் லிட்டர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 16வது வார்டில் கடந்த 1 மாதமாக குடிநீர் கிடைக்காததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரியை பார்க்கச் சென்றால் அதிகாரி சிவகங்கை போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

    16வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    திருப்பத்தூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள காக்கணாம்பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.

    ஆனால் பெற்றோர் வாங்கி கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ரஞ்சிதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று அவர் திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ரஞ்சிதா பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்து பெற்றோரும் உறவினர்களும் அங்கு கூடினர்.

    இது பற்றி குருசிலாப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரஞ்சிதாவின் உடலை மீட்டனர். உடலை பார்த்து ரஞ்சிதாவின் பெற்றோர் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    போலீஸ் விசாரணையில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் மனம் உடைந்த ரஞ்சிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் திவாரி, அழகேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் திவாரி, அழகேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் இளையான் குடி வட்டம் குமாரகுறிச்சி, நாகமுகுந்தன்குடி, காளையார் கோவில் வட்டம் செம்பனூர், சிவகங்கை வட்டம் சோழபுரம், ஒக்கூர், கல்லல் வட்டம் கொரட்டி, தட்டட்டி ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன் மற்றும் வட்டாட்சியர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

    விலையில்லா கறவை மாடு வழங்க பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் சப்- கலெக்டர் அலுவலகத்தில் இன்று முற்றுகையிட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள பா.முத்தம்பட்டி கிராமத்தில் அரசு விலையில்லா கறவை மாடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று மாலை பா.முத்தம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சப்- கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கறவை மாடு பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. சப்-கலெக்டர் நேரடி பார்வையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    பின்னர் இது தொடர்பாக சப்-கலெக்டர் கார்த்தி கேயனிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
    சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27–ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27–ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இதில் மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 12¼ பவுன் நகை, ரூ. 4 ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.

    பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள 2 வீடுகளிலும் கொள்ளையடித்து உள்ளது. அங்கு கொள்ளை போன நகை, பணம் குறித்து தகவல் தெரியவில்லை.

    கொள்ளை குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×