search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் 22-ந் தேதி தொடக்கம்
    X

    விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் 22-ந் தேதி தொடக்கம்

    • விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் 22-ந் தேதி தொடங்குகிறது.
    • வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடு களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழா வான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்த ருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.

    Next Story
    ×