என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்பு
  X

  நெற்குப்பை பேரூராட்சியில் தலைவர் புசலான் தலைமையில் உறுதிமொழி எடுத்தபோது எடுத்தபடம்.

  பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
  • போட்டியில் சிறந்த கோலங்களை வடிவமைத்த மகளிர் சுயநிதி குழுக்களுக்கு தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் புசலான் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். போட்டியில் சிறந்த கோலங்களை வடிவமைத்த மகளிர் சுயநிதி குழுக்களுக்கு தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

  அதனைத் தொடர்ந்து நெற்குப்பையில் செயல்பட்டு வரும் 72 மகளிர் சுயநிதி குழுக்களில் முதல் கட்டமாக 10 குழுக்களை தேர்வு செய்து அவர்களுக்காக வங்கிகளில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.75 லட்சம் கடன் பெறுவதற்கான ஒப்புதல் ஆணையை தலைவர் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் சிங்கம்புணரி, நெற்குப்பை மகளிர் சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் வாணி, இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், சித்ரா சின்னையா, வரி தண்டலர் துரைராஜ், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு, பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயநிதி குழு உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியின் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  Next Story
  ×