search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி

    • தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் நகரங்களின் உரிமைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சாந்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

    பேரணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. குப்பைகளை மழைநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் போடக்கூடாது.

    புதன்கிழமைதோறும் உடற் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் தற்போது நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இல்லங்களில் தினசரி குப்பை கழிவுகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனியாக பிரித்து தங்கள் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பிளாஸ்டிக், பாலித்தீன், பைகள், கண்ணாடி தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு, பழைய துணி, மரச்சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருள்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் என மக்காத குப்பைகளை வழங்க வேண்டும்.

    புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளான உணவுக் கழிவுகள், பழ கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக் கழிவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து வீடுகளிலும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×