search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம்
    X

    கல்லல் ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலா ளர் செந்தில்நாதன் முன்னிலையில், அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க. நிர்வாகிகளை படத்தில் காணலாம். அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.

    கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம்

    • சிவகங்கை சட்டமன்ற தொகுதி கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத் தொகுதி கல்லல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் பனங்குடியில் ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான ஏ.கே.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் 80 சதவீத மருத்துவ கல்லூரி, 90 சதவீத சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட் டது. மேலும் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறக்கப்பட்டது. 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.

    இதை நமது கட்சி நிர்வா கிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் கல்லல் ஒன்றியத்தில் தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் செந் தில் நாதன் முன்னிலையில் இணைந்தனர்.

    Next Story
    ×