என் மலர்
உள்ளூர் செய்திகள்

சைக்கிள் மீது பைக் மோதல்; 2 பேர் பலி
- சைக்கிள் மீது பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி குமார் (வயது 45). இவரது மைத்துனரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கோபால்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (40) இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.
கே.புதுப்பட்டிக்குள் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகன் என்பவர் சைக்கிளை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ், அழகன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இருவரும் ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






