search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு பூங்கா
    X

    திருப்புவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் உள்ளனர்.

    கலைஞர் நூற்றாண்டு பூங்கா

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×