search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தப்பகுட்டை ஊராட்சி அருகே குடிநீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
    X

    தப்பகுட்டை ஊராட்சி அருகே குடிநீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி

    • குடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுாரில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    காகாபாளையம்:

    மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுார், பெரியபொன்னு காட்டுவளவு பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2012- ல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை அதில் நீறேற்றம் செய்வதில்லை. அதனால் அந்த பகுதியில் சுமார் 20- க்கும் மேற்பட்ட தனிபைப்லைன் அமைத்து மக்கள் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது. .அதனால் மக்கள் தங்கள் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் குடிநீருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தறிதொழிலாளி வெங்கடேசன் (வயது 36) என்பவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவி யேற்ற பிறகு பைப் லைன் துண்டிக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 2 தூண் எங்கள் நிலத்திலும்,மற்ற 2 தூண் மற்றொருவர் நிலத்திலும் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை இது குறித்து கடந்த 28-ந்தேதி மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தோம். கடந்த 12-ல் சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தோம் கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க முடியாமல் திரும்பிவிட்டனர். பிரச்சினை தீர்த்து குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×