search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை பள்ளி மைதானத்தில் என்.சி.சி. மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
    X

    துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

    பாளை பள்ளி மைதானத்தில் என்.சி.சி. மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி

    • பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தேசிய மாணவியர் மூன்றாம் படைப் பிரிவினருக்கு கர்னல் தீபக்சிங் சாமந்த் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.அதில் சிறந்த முறையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 30 மாணவிகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 30 மாணவிகள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் 10 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வரும் மார்ச் மாதம் மதுரையில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். போட்டியில் மாணவர்களை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் தலா 3 சுற்றுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சரியாக இலக்கை நோக்கி சுட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×