search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
    X

    குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர்.


    திண்டுக்கல் அருகே தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

    • ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது.
    • எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மூவேந்தர் நகர், எ.எம்.ஜெ.எம்.நகர், சக்தி பாலாஜி நகர் பகுதிகள். இங்கு 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.

    இதனால் சுகாதார கேட்டில் சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கடந்த ஓராண்டாக கால்வாய் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் எங்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே மழைநீரோடு தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×