என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.எஸ்.அழகிரி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் பற்றி கருத்தரங்கம்
- காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நவீன் முன்னிலையில் நாளை (25-ந்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.






