என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதியம்புத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- புதியம்புத்தூர் அருகே மது மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தில் கீழமுடிமன் புனிதவளன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், லசால் இளைஞர் இயக்கம், சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மது மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்து நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாமிநத்தம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி நல்லதம்பி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசிலா, புனித வளன் மேல் நிலைப்பள்ளி தாளாளர் அன்பு நாதன் மற்றும் ஆசிரி யர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






