search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  ரூ.56 கோடி மதிப்பில் பள்ளி- விடுதி கட்டிடம்:  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    X

    கடலூரில் பள்ளி விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணியினை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

    கடலூரில் ரூ.56 கோடி மதிப்பில் பள்ளி- விடுதி கட்டிடம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

    • கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
    • இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்ட ரூ.56.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    இந்த கட்டிடத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.விழாவில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பிரமிளா, எம்.கே.எம். எஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பஷிருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×