என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சரவணம்பட்டியில்  மசாஜ் சென்டரில் விபசாரம்
  X

  சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.
  • கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என்றார்.

  கோவை, செப். 11-

  கோவை நகரில் பல இடங்களில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் சில சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.

  இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அவர் கோவையில் உள்ள மசாஜ் சென்டருக்கு செல்ல நினைத்தார்.

  இதனையடுத்து அந்த வாலிபர் சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த பார்த்திபன் (28), என்பவர் இங்கு மசாஜ் செய்து விட்டு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் போதும், நீங்கள் ஜாலியாக இருக்கலாம் என்றார்.

  இதனை கேட்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை மீட்டு கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

  மசாஜ் செய்ய சென்ற வாலிபரிடம் இளம்பெண்ணை காட்டி விபசாரத்துக்கு அழைத்த பார்த்திபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×