என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய5 டிப்பர் லாரிகள்
- அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பூனேபள்ளி பகுதியில் மத்திகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்தனர். போலீசார் நிற்பதை கண்டு திடீரென்று லாரியை வழியில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது அந்த லாரியை சோதனை செய்ததல் அனுமதியின்றி 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 6யூனிட் எம்.சாண்ட் மணல், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் ஓசூர் அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர். அதில புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் வெட்டி எடுத்து வந்து கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை அறிந்த 4 டிப்பர் லாரிகளின் டிரைவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்த பொக்லைன் டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து மண்ணை வெட்டி கடத்திய 4 டிப்பர் லாரிகளையும், ஒரு ெபாக்லைன் வண்டியையும், 100 யூனிட் மண்ணையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.






