search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  சமத்துவ பொங்கல் விழா - விளையாட்டு போட்டிகள்
    X

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் நெல்கட்டும்செவல் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கியபோது எடுத்தபடம்.


    வாசுதேவநல்லூர் அருகே சமத்துவ பொங்கல் விழா - விளையாட்டு போட்டிகள்

    • வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில, நகரம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் விமலா மகேந்திரன், முனியராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் (கி.ஊ), ஊராட்சி செயலாளர், பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனை வருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் அருகே உள்ள நகரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் சந்திர மோகன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து துணை இயக்குநர் பிரான்சிஸ் மகாராஜன், ஊராட்சித் மன்றத் தலைவர் அமுதாரமணிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், முனியராஜ், ஊராட்சி துணைத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் (கி.ஊ), கிளை செயலாளர் ஆனந்தன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளார் மணிகண்டன், விக்கி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகரம் ஊராட்சி மன்ற தூய்மை பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே துரைச்சாமியா புரம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான கபடி போட்டி நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளைச் செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் தேவராஜன், அவைத் தலைவர் ஜார்ஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×