என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி  சேலம் வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி
    X

    கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

    கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி நடந்தது.

    சேலம்:

    சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே வசித்து வருபவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (வயது 26). இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி இ-மெயில் வந்துள்ளது.

    அதை உண்மை என்று நம்பிய விஜய சரவணன் அதில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும்படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்யும்படியும் கூறினார்.

    அதை தொடர்ந்து விஜய சரவணன் அந்த 5 வங்கி கணக்குகளில் ரூபாய் ரூ. 8 லட்சத்து 13 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான டிக்கெட் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறி உள்ளார்.

    பின்னர் அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சரவணன் இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×