என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் தனியார் வங்கியில் 91 கிராம் கவரிங் நகை வைத்து ரூ.4 லட்சம் மோசடி
Byமாலை மலர்30 Sept 2023 3:19 PM IST
- அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
- நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்க நகை அடமான நிறுவனத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் அந்த நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மதியழகன் (40) என்பவர் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X