என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரபல ரவுடியை வெட்டிய வாலிபர் கைது
- சேலம் வீராணம் தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் குள்ளம்பட்டி பிரபு பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
- இந்நிலையில் நேற்று சுரேசை(28) போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் குள்ளம்பட்டி பிரபு (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
முதல் மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில், 2-வதாக இன்னொருவரின் மனைவியை குழந்தை களுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வருகிறார். அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாக கூறப்படு கிறது.
இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 24-ந் தேதி குள்ளம்பட்டி பிரபு வெளியே வந்தார். இவரது ரவுடிதனத்தின் காரணமாக அப்பகுதியில் ஏராள மானோர் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
பிரபு, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து, பேச சொன்னதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுரேசிடம், மனைவி கூறி அழுதுள்ளார்.
இதனால் கடும் கோபம் அடைந்த சுரேஷ், அவரது தாய் மாமா வெங்கடேசுடன் சேர்ந்து, ரவுடி குள்ளம்பட்டி பிரபுவை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு போராடிய பிரபுவை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், வெங்க டேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சுரேசை(28) போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






