என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம்-கோவை பயணிகள் ரெயில் இந்த மாதம் முழுவதும் ரத்து
- சேலம்-கோவை இடையே மெமு ரெயில் எனப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
- தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த இரு மார்க்கங்களிலும் மெமு ரெயில் ரத்து செய்யப் படுகிறது.
சேலம்:
சேலம்-கோவை இடையே மெமு ரெயில் எனப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
இதே போல் மறுமார்க்கத் திலும் (வண்டி எண்-06802) இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம்-ஈரோடு வரையிலான தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த இரு மார்க்கங்களிலும் மெமு ரெயில் ரத்து செய்யப் படுகிறது.
இதே போல் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் (வண்டி எண் 06412) மற்றும் ஜோலார் பேட்டை யில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (வண்டி எண் 06411) ஆகிய ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.






