என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு 3 ஆண்டு ெஜயில்
    X

    வாலிபருக்கு 3 ஆண்டு ெஜயில்

    • அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி பிரிவில், 4பேர் மீதும் வழக்குப்பதிந்த னர்.
    • ஹரிஹரசுதனுக்கு, 3ஆண்டு சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

    சேலம்:

    சேலம், மணக்காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 30). பூ தோரணம் கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே நின்றி ருந்தார். அப்போது, மணக்காட்டை சேர்ந்த ஹரி ஹரசுதன் (34), சதீஸ்குமார் (34), செந்தில்முருகன் (32), அன்வர் (32) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்க ளுக்கும், சுப்ரமணிக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. அப்போது சுப்ர மணி கத்தியால் குத்தப் பட்டார். இதில் அவர் படு காய மடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி பிரிவில், 4பேர் மீதும் வழக்குப்பதிந்த னர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்.3 நீதிமன்றத்தில் நடந்தது. செந்தில்முருகன் இறந்து விட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஹரிஹரசுதனுக்கு, 3ஆண்டு சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. சதீஷ் குமார், அன்வர் விடுவிக்கப் பட்டனர். ஹரிஹரசுதன் தனியார், டிவியில் காமிரா மேனாக பணிபுரிகிறார்.

    Next Story
    ×