என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
    X

    கூத்தாண்டவர் முன்பாக தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்.

    கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

    • புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
    • நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கூத்தாண்டவர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது. பூசாரி தாலி எடுத்து கொடுக்க திருநங்கை கள் அதை கழுத்தில் கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருநங்கைகள் கையால் ஆசி பெற்று திரு நீரு பெற்றுச் சென்றனர். அதன் பிறகு மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Next Story
    ×