search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூ மார்க்கெட்டில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வியாபாரிகள், பொது மக்கள்

    • சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது.
    • இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    சேலம்:

    சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது. இந்த மார்க்கெட்டிற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்காக அதிகளவில் பூக்களை கொண்டு வருவார்கள். அதே போல சேலம் ம ற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    புதிய கட்டிடம்

    இந்த பூ மார்க்கெட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.70 கோடி செலவில குளிர் பதன வசதியுடன் நவீன மயமாக்க முடிவு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் பூ மார்க்கெட் தற்காலிகமாக போஸ் மைதானத்தில் செயல்பட்டது.

    இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து மீதம் உள்ள பணிகளும் நிறைவு பெற்று தற்போது தயாராக உள்ளது.

    ஆனால் தற்போது வரை பூ மார்க்கெட் திறக்கப்படாத நிலையில் தற்காலிக பூ மார்க்கெட் பழைய பஸ்நிலைய வணிக வளாக பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில் பூக்கடைகளும் அங்கு செயல்படுவதால் கடும் இட நெருக்கடி நிலவுகிறது.

    சிக்கி தவிக்கும் மக்கள்

    குறிப்பாக முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பூக்கள் வாங்க பொது மக்கள் குவிவதால் கடும் ெநரிசல் நிலவுகிறது. மேலும் மழையும் பெய்வதால் சரியான மேற்கூரை இல்லாமல் வியாபாரிகளும் பொது மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வியபாரிகள் மற்றும் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே புதிதாக கட்டப்பட்ட வ.உ.சி. பூ மார்க்கெட்டை உடன டியாக திறந்து அந்த புதிய கட்டிடத்திற்கு பூ மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்பது பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் பூ வாங்க வரும் பொது மக்ககளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×