என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாளை தீபாவளி பண்டிகையையொட்டிசேலம் பஸ், ரெயில் நிலையத்தில் அலைேமாதிய கூட்டம்
- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், பேர்லேண்ட்ஸ், 5-ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள், இனிப்பு கடைகளில் கூட்டம் அைலமோதியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதே போல் சீலநா யக்கன்பட்டி, கொண்ட லாம்பட்டி, பெங்களூரு பைபாஸ் ரோடு பகுதிக ளிலும் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலத்தில் வசிக்கும் வெளியூர் காரர்களும், வெளியூரில் வசிக்கும் சேலத்து காரர்களும் அதிகளவில் வந்ததால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சென்ற அனைத்து பஸ்களும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதனால் பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் இடையே கடுமையான போட்டியும் நிலவியது. சிலர் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இடம் பிடித்தனர்.
இதே போல் சேலம் வழியாக சென்ற ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும் ரெயில்களில் யாராவது பட்டாசு கொண்டு செல்கிறார்களா என்று போலீ சார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
பட்டாசு கடைகளில் கூட்டம்
இந்த ஆண்டு சேலத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், இரும்பாலை பகுதியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் சிறுவர்கள் அதிகளவில் திரண்டு தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
கண்காணிப்பு
பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். ேமலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாராவது பொதுமக்களிடம் கை வரிசை காட்டுகிறார்களா, என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதே போல் புறநகர் பகுதிகளான மேட்டூர், கொளத்தூர், ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் அலை மோதியது. மேலும் நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றனர். இதனால் பஸ் நிலையத்திலும் கூட்டம் நிலவியது.
இதே போல் குமார பாளையம், பள்ளி பாளைம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 700 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








