என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டில் மது குடித்தவர்களைதட்டி கேட்ட ஊழியர் மீது தாக்குதல்
- மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி காந்திநகர் பகுதி சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன் தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (23), லோகநாதன் மகன் கோபி (32), மற்றும் ரவி, ஆறுமுகம் ஆகியோர் சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாரியப்பனை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ரவி மற்றும் ஆறுமுகத்தை வலை வீசி தேடி வருகிறார்கள்.
Next Story






