என் மலர்
உள்ளூர் செய்திகள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புவங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா பேராராட்டம்
- மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
- சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.
சேலம்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.
பின்னர் கோட்டை ஸ்டேட் வங்கி முன்புள்ள மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வர முயன்றனர். அப்போது போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.
பின்னர் கோட்டை ஸ்டேட் பேங்க் நுழைவு வாயில் முன்பு உள்ள சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீண்டும் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட கோட்டை ஸ்டேட் பேங்க் முன்புள்ள மெயின் ரோட்டிற்கு வர முயன்றனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
150 பேர் கைது
இதனை அடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் கூறும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசு 9 ஆண்டு காலமாக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத மோடி தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.
மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.






