search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் புதூர் ஏரியில் 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா
    X

    மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற பனை விதைகள் விதைக்கும் விழாவில் பங்கேற்றவர்கள்.

    மாரியம்மன் புதூர் ஏரியில் 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
    • இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் வரவேற்றார். அரிமா வட்டார தலைவர் ஜவஹர், டாக்டர் பொன்னம்பலம், பொருளாளர் கலைஞர்புகழ், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தேன்மொழி சண்முகம், ஊராட்சி செயலாளர் குமரேசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் ரமேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மக்கள் நலப் பணியாளர் தனபால், கிராம உதவியாளர் கணேசன் மற்றும் அம்மாசி ஆகியோர் கொண்ட குழுவினர் 2ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×