என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாரமங்கலத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா
- போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த வார விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்
மினி மாரத்தான் போட்டி
இதையடுத்து போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் நிலையத்திலிருந்து தொடங்கி மினி மாரத்தான் போட்டி குறுக்குப்பட்டி, பவளத்தானூர் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்து அடைந்தது. அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ரவிச்சந்திரன், மதிவாணன் மற்றும் கருணாகரன் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






