என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலிசேலம் ஜங்சன்  ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக போலீசார் தீவிர சோதனை
    X

    கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலிசேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக போலீசார் தீவிர சோதனை

    • கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ரெயில் நிலையங்கள்

    இதையடுத்து நாடு முழுவதும் ெரயில்வே நிலையங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மோப்பநாய் பவானியை கொண்டு பார்சல் அலுவலகம், டிக்கெட் புக்கிங் அலுவலகம், வாகனம் நிறுத்துமிடம், முதலாவது நடைமேடை பகுதி ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனையிட்டனர்.

    சோதனை

    தொடர்ந்து சேலம்- விருத்தாச்சலம் ெரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். ெரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயில் பகுதி மற்றும் தண்டவாளங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

    2-வது நாளாக...

    2 -வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் ெரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், பார்சல் முன்பதிவு செய்யும் இடம், நடைமேடைகள் என பல்வேறு இடங்களில் மோப்ப நாயுடன் சேலம் நகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ெரயில்வே பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்மித், செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கண்காணிப்பு

    இதில் குறிப்பாக பயணிகள் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் ெரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×