search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
    X

    மேட்டூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    • தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 வழியிடை ஊரக கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தினசரி 150 எம்.எல்.டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குடிநீர் குழாய் உடைப்பு

    இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் தண்ணீரில் நனைந்தபடியே சென்றனர். தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முறையான பராமரிப்பு பணி இல்லாததால் ராட்சத குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×