search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டுப்பட்டியில் தீ பற்றி 8 ஆடுகள் கருகியது
    X

    ஆட்டுப்பட்டியில் தீ பற்றி 8 ஆடுகள் கருகியது

    • கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    • பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு மாலை வழக்கம் போல சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளார்.

    இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆட்டுபட்டியில் விளக்கேற்றி விட்டு செல்லம்மாள் வீடு திரும்பி உள்ளார். அப்போது பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் ஆட்டுப்பட்டி முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்தில் மொத்தம் 8 ஆடுகள் தீயில் கருகியது. மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீ விபத்தில் 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×