search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்ட நிறுவனங்கள்   தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு  தொழிலாளர் துறை அதிகாரி அறிக்கை
    X

    சேலம் மாவட்ட நிறுவனங்கள் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தொழிலாளர் துறை அதிகாரி அறிக்கை

    • நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http//www.labour.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்க–ளுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http//www.labour.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகமான தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்), வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்ைட, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய, விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்க்குத மாதம் 11-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணபித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https//www.karuvoolam.in.gov.tn/challan/echallan வலைதளத்தில் இ-செல்லான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

    Next Story
    ×