search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் தினமும் 4 டன் காய்கறிகள் உற்பத்தி
    X

    சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் தினமும் 4 டன் காய்கறிகள் உற்பத்தி

    • சேலம் மத்திய சிறை கைதிகள் மூலம் காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.
    • விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை கண்டறிந்து நன்னடத்தையின் அடிப்படையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை சாலையில் பணியமடுத்தப்படு கின்றனர். அதன் அடிப்படையில் திறந்த வெளி சிறைச்சாலையில் 10 நன்னடத்தை கைதிகள் உள்ளனர்.

    கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது கரடு முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மத்திய சிறைக்கு தேவையான காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று திறந்தவெளி சிறை சாலையில் ஆய்வு மேற்கொண்டார் . இதனை தொடர்ந்து அவர் கூறும் போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் உதவி ஆய்வாளர் திருமலை தெய்வம் தலைமையில்6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் . நன்னடத்தை கைதிகளைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு உரம் எருஉரம் உள்ளிட்ட உரங்களை கொண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் முள்ளங்கி புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு நாள் ஒன்றுக்கு மூன்று முதல் 4 டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் நாளொன்றுக்கு 15 லிட்டர் பால் மத்திய சிறை அனுப்பப்படுகிறது . இதன் மூலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு கைதிகளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்செலவு மிச்சமாகிறது. இனிவரும் காலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×