search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  108 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 108 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 77 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 77 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சியில் 23 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டியில் தலா 4 பேர், ஓமலூரில் 3 பேர், மேட்டூர், ஆத்தூரில் தலா 2 பேர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப் பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 6 பேர், ஈரோடு, வேலூரில் வந்த தலா 5 பேர், கரூர், சென்னையில் இருந்து வந்த தலா 4 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 33 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,710 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,953 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 223 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×