search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
    X

    துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.


    கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

    • துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் பாதுகாப்பு காலணிகளை வழங்கினார்
    • துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடு வீடாக குப்பைகளைச் சேரிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, தலைக்கவசம், முக கவசம், ஒளி பிரதிபலிக்கும் சட்டை உள்ளிட்ட 6 வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதில் முதல் கட்டமாக துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் பாதுகாப்பு காலணிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகரச் செயலாளர் அப்பாஸ் மற்றும் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலகம் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் அனைத்து அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.




    Next Story
    ×