search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ்.

    தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
    • இதுவரை திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித் தொகைக்கு ரூ. 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டூவிபுரத்தி லுள்ள எம்.எல்.ஏ. அலுவல கத்தில் சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

    மாதந்தோறும் ரூ. 1,500

    இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 50 மாற்றுத்தி றனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சமூகபாது காப்பு திட்ட தாசில்தார் ராஜசெல்வி, தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர்கள் வேல்ராஜ், செல்லம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலட்சுமி, பரமேஸ்வரி, திருவரங்க செல்வி, செந்தில்கு மார், நட்டார் செல்வம், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

    முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் சிறப்பான திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பேர் பயன்பெறும் வகையில் மாதம் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வழங்கி உள்ளோம்.

    கூடுதலாக முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி கூடுதலாக வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். அவர்கள் முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதன் மூலம் நம்முடைய மாவட்டத்தில் இன்னும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள்.

    பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு உதவுத்தொகை பெற, விண்ணப்பித்து வைத்திருக்கும் பாண்டு பேப்பரை பெற்றோர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து முதிர்வு உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள்.

    இதுவரை திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித் தொகைக்கு ரூ. 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதுவரை பெண் குழந்தைகளுக்கான முதிர்வு உதவித் தொகையை பெறாத பெற்றோர்கள், உடனே அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    பேட்டியின் போது தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் பாஸ்கர், கருணா, மணி, அல்பட், அற்புதராஜ், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பி னர் அறிவழகன், வட்டச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×