search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள், குழந்தைகள் நலப்பிரிவு காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் முரளிதரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள், குழந்தைகள் நலப்பிரிவு காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    • போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது

    தேனி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவு கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன், போடி நகர்மன்றத்தலைவர்ராஜராஜேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) பரிமளாசெல்வி, மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×