search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனாவால்  பெற்றோரை இழந்த 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி நிவாரணம்
    X

    கொரோனாவால் பெற்றோரை இழந்த 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி நிவாரணம்

    • இரு பெற்றோர்களையும் இழந்த 13 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 450 குழந்தைகளும் கண்டறி யப்பட்டு இவர்களின் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி மதிப்பில் பொது நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு, ஜூன். 23-

    கொரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து தமிழகத்திலும் எதிரொலித்தது. கொரோனா உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பலர் தங்களது சொந்தங்களை இழந்து உள்ளனர்.

    குறிப்பாக குழந்தைகள் தங்களது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையும் இழந்து உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வா–தாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதையடுத்து அவர்களின் வாழ்வா–தாரம் மேம்படுத்தும் வகையில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தை, இருவரையும் இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இரு பெற்றோர்களையும் இழந்த 13 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 450 குழந்தைகளும் கண்டறி யப்பட்டு இவர்களின் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் ஒற்றை பெற்றோரை இழந்த 310 குழந்தைகளுக்கு ரூ.9 கோடியே 30 லட்சம் பொது நிவாரண நிதி, இரு பெற்றோரையும் இழந்த 12 குழந்தைகளுக்கு ரூ.60 லட்சம் பொது நிவாரண நிதி என மொத்தம் 322 குழந்தைகளுக்கு ரூ.9.60 கோடி மதிப்பில் பொது நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் மற்ற குழந்தை களுக்கும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×