search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டு கார் வாங்கி தருவதாக பள்ளி முதல்வரிடம்  ரூ.13 லட்சம் மோசடி
    X

    வெளிநாட்டு கார் வாங்கி தருவதாக பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி

    • இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.
    • கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி முதல்வர் ஆவார்.

    இவர் இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.

    பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, நவீன காரை வாங்குவதற்கு முதலில் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் 7 தவணையாக ரூ.13 லட்சத்தை செல்வநாயகம் அனுப்பி உள்ளார். எனினும் அந்த நபர் காரை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், பதில் இல்லை.

    கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வ நாயகம் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×