என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்நாடிக் புதிய தலைவர் நியமனம்
By
மாலை மலர்31 July 2024 1:31 PM IST (Updated: 31 July 2024 2:40 PM IST)

- நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
- இயக்குநர் என். லிங்குசாமி கலந்து கொண்டார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்நாடிக் புதிய தலைவராக பார்க் எலான்ஸா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புவனா ரமேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பாக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவருடன் செயலாளராக ஜெயந்தா ஈஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர்களை தொடர்ந்து நிர்வாக குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக என்.எஸ். சரவணன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏ2பி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். இவர்களை தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாடிக் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.
Next Story
×
X