என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தரஊதியம் 1900 ரூபாயாக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும்.
- 7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இணைச் செயலாளர்கள் மூர்த்தி, கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். தரஊதியம் 1900 ரூபாயாக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும். 7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு சம்பளங்கள் வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.