என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைப்பு- விபத்து ஏற்படும் அபாயம்
- 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
மிகவும் குறுகலான அந்த இடத்தில் சாலையின் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பங்களும் பழமையான புளிய மரங்களும் சாலையின் நடுவே உள்ளது.
இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
உயிர் பலி வாங்கும் முன்பு சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
Next Story