என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்
- கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்பட வில்லை.
- காலி குடும்பங்க ளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி செல்லும் சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் கல்லாவி- ஊத்தங்கரை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






