என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்தவெளி கிணற்றால் ஆபத்து
    X

    திறந்தவெளி கிணற்றால் ஆபத்து

    • மழை பெய்து வரும் நிலையில் இந்த கிணறு நிரம்பி வழிகிறது.
    • தடுப்பு கம்பி அல்லது எச்சரிக்கை பதாகைகள் வைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்து உள்ளது செங்கப்பள்ளி.‌இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தை கூடும். அப்போது சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.

    சந்தை அருகில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இடத்தின் அருகே பெரிய அளவிலான திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த கிணறு நிரம்பி வழிகிறது.

    இதனால் தரையோடு தரையாக காணப்படும் இக்கிணறு இருக்கும் இடம் தெரியாமல் எவரேனும் கால் வைத்தால் கிணறுக்குள் விழும் அபாயகரமான நிலை உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு தடுப்பு கம்பி அல்லது எச்சரிக்கை பதாகைகள் வைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×