search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் அபாயம்
    X

    நிலக்கோட்டை அரசு பள்ளி முன்பு தேங்கியுள்ள மழை நீர்.

    நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் அபாயம்

    • கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது.
    • மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது. இந்த மழைநீர் நிலக்கோட்டை மினி பஸ் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக அக்ரகாரப் பட்டி சாலையை கடந்து கே.குரும்பபட்டி கண்மாயில் சேருவது வழக்கம்.

    அவ்வாறு மழைநீர் செல்லும் வழியில் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்ட பாலம் பழுதடைந்து மழைநீர் செல்ல வழி யில்லாத காரணத்தால் மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் புகுந்தது. அந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்று பள்ளியில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    எனவே உடனடியாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் எனவும் பள்ளி மாணவ-மாணவி களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×