search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே கிராமத்தைச் சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் தவிப்பு
    X

    அரசு கள்ளர் தொடக்க பள்ளி அருகே உள்ள கோவில் முன்பு தேங்கி நிற்கும் மழை நீரை படத்தில் காணலாம்.

    நிலக்கோட்டை அருகே கிராமத்தைச் சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் தவிப்பு

    • முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது.
    • பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டி பட்டி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளிகள்.

    இங்கு அங்கன்வாடி மையம், அரசு கள்ளர் பள்ளி மற்றும் முத்தால ம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில்கள் உள்ளது. இக்கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியா மல் மிகுந்த சிரமப்பட்டன.

    வேறு வழியின்றி ரோட்டின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீர் வெளியேற்றினா லும் ஆங்காங்கே தண்ணீர் பள்ளிகூடம் மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கனமழை பெய்யும் நேரங்களில் எல்லாம் இதேபோன்ற சூழல் நிலவுவதால் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×