search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி  செயல்திட்ட பயிற்சி
    X

    ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி செயல்திட்ட பயிற்சி

    • பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார்.
    • உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படிதிருப்பூர் மாவட்டம், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் சார்பாக மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல்திட்டத்திற்கான பணிமனை உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் 2022 –- 23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்தை "கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார். அதன் ஒருபகுதியாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்குக் கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடைபெற்றது.

    அதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தொடங்கி வைத்து கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினார். உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

    Next Story
    ×