என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
  X

  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

  குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர்.
  • இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ரோடு ஆக்கிரமிப்பு தீராத பிரச்சனையாக இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

  இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

  வருடங்கள் செல்ல, செல்ல இந்த ரோடு மிகவும் பழுதாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெற்றனர். இதன்படி நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர். பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  Next Story
  ×