search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்:செந்தில் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    நின்னையூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

    தியாகதுருகம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்:செந்தில் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது.
    • நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48) கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தண்ணீரை ஊற்றி பொதுமக்கள் தீயை அனணத்தனர். இதில் கோவிந்தனின் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. ஏழுமலை வீடு பகுதி சேதம் மட்டும் அடைந்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் மற்றும் ஏழுமலை குடும்பத்தினரை சந்தித்து சொந்த பணம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் வீடு முழுவதும் சேதம் அடைந்த கோவிந்தனுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர். இதேபோல் வீடு பகுதி சேதம் அடைந்த ஏழுமலைக்கு அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சேதமதிப்பு1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என வும் கூறப்படுகிறது.

    Next Story
    ×